#Breaking: தஞ்சாவூர் மருத்துவமனையில் திருடப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்பு.. எஸ்.பி பேட்டி.. பெற்றோர்கள் ஆனந்த கண்ணீர்.! - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவமனையில் மீட்கப்பட்ட குழந்தை பத்திரமாக 14 மணிநேரத்திற்குள் மீட்கப்பட்டது.

தஞ்சாவூரில் உள்ள பர்மா காலனி பகுதியை சார்ந்தவர் குணசேகரன் (வயது 24). இவர் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 22). இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். 

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த ராஜலட்சுமி, கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக பிரசவ வலி ஏற்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதால், பெற்றோரின் ஆதரவு இல்லாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்த பெண்மணி அவர்களுடன் பேசி பின்னர் குழந்தையை கடத்தி சென்றுள்ளார். 

நேற்று இந்த நிகழ்வு நடந்த நிலையில், காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், குழந்தையை கடத்தி சென்ற பெண்மணியை கண்டறியவும், குழந்தையை பத்திரமாக மீட்கவும் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்ட்ட நிலையில், இன்று மதியம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு உடல் நல பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா செய்தியாளர்களை சந்திக்கையில், "குழந்தை கடத்தல் நடந்த 14 மணிநேரத்திற்குள் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்திற்கு உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு மிக நன்றிகள், பாராட்டுக்கள். குழந்தைக்கு டயப்பர் வாங்கிய கடையை கூட கண்காணித்து குழந்தையை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், அவர் தனக்கு தேவையான நபரிடம் இருந்து சொத்தை வாங்க, குழந்தையை கடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காவல் துறை அதிகாரிகள் தங்கி, பணியில் ஈடுபட அறை ஒதுக்கி கொடுப்பதாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் உறுதி அளித்துள்ளார். 

அங்கு ஆண், பெண் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர் மருத்துவமனைக்கு வந்ததும் குழந்தையை கடத்தவில்லை. கணவன் - மனைவியிடம் நல்ல முறையில் பேச்சுக்கொடுத்து, விபரங்களை பெற்றுக்கொண்டு நம்பிக்கையை ஏற்படுத்தி குழந்தையை கடத்தி இருக்கிறார். பெண்மணி விஜி (வயது 37) என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் பிற தகவல் அனைத்தும் தெரிவிக்கப்படும். 

குழந்தையை கடத்தியவருக்கும் - ஆட்டோ ஓட்டுனருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. குழந்தையை பெண்மணி கட்டைப்பையில் போட்டு தூக்கி சென்றுள்ளார். குழந்தை அழுதிருந்தால் கூட ஓட்டுனருக்கு சந்தேகம் எழுந்து இருக்கும். ஆனால், குழந்தை உறங்கி இருந்ததால், ஆட்டோ ஓட்டுனருக்கு சந்தேகம் எழவில்லை. சாதாரணமாக மருத்துவமனைக்கு வந்து செல்கிறார் என்று நினைத்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த தகவலின் பேரிலேயே காவல் துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பெண்மணியை கண்டறிய முடிந்தது" என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Govt Hospital Kidnapped Baby Rescued Successfully 9 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->