உரிமை கோராமல் அரசு மருத்துவமனையில் 20 சடலங்கள்..!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் பொறுப்பு முதல்வர் மருத்துவர் மருததுரை அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அறிக்கையில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கூறப்படாத சடலம் அடக்கம் செய்ய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, கடந்த 2018 ஆம் வருடத்தின் ஏப்ரல் மாதம் முதல் இந்த 2020 ஆம் வருடம் மே 2020 வரை தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோரப்படாத 20 சடலம் இருக்கிறது. 

இதில் 13 ஆண்கள் சடலமும், 7 பெண்கள் சடலமும் இருக்கிறது. கடந்த 2018 ஆம் வருடத்தில் 4 சடலமும், 2019 ஆம் வருடத்தில் 8 சடலமும், மே மாதம் வரை 8 சடலமும் என 20 சடலங்கள் உரிமை கோரப்படாமல் இருக்கிறது. 

இந்த தகவல் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் சடலத்தை உரிமை கோராத பட்சத்தில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவின் மூலமாக உடல்கள் அடக்கம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Govt Hospital 20 Dead bodies


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->