விஷம் கலந்த எலி மருந்து வாழைப்பழத்தை சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலி.. பெற்றோர்களே கவனம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் சிராங்குடி தெற்கு தெரு பகுதியை சார்ந்தவர் ராமச்சந்திரன். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், தமிழ்செல்வி என்ற மனைவி இருக்கிறார். ராமச்சந்திரன் - தமிழ்செல்வி தம்பதிக்கு கார்த்திக் என்ற 19 வயது மகனும், கவிதாஸ் என்ற 15 வயது மகனும் உள்ளனர். 

கார்த்திக் தஞ்சாவூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ முதல் வருடம் பயின்று வந்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி மாலை நேரத்தில் கார்த்திக் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த சமயத்தில், டிவியின் மீது இருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டு இருக்கிறார். 

பின்னர், இரவு நேர சாப்பாட்டிற்கு பின்னர் திடீரென இரத்த வாந்தி எடுக்கவே, பதறிப்போன தாய் ஏன்? இரத்த வாந்தி எடுக்கிறாய்? என கேட்டுள்ளார். இதன்போது, டிவி மீது இருந்த வாழைப்பழத்தை சாப்பிட்டதாக தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த தாய் அது எலிக்காக வைக்கப்பட்டு இருந்த விஷம் கலந்த பழம் என்று கூறியுள்ளார். 

தமிழ்செல்வியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கார்த்திகை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே, இன்று சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.  

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மதுக்கூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விஷயம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur College Student Karthick Died Eating Rat Poison Banana 29 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->