மருத்துவர்களை தாக்கினால், தரக்குறைவாக பேசினால் குண்டாஸில் நடவடிக்கை - தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த மாதேஸ்வரன் மற்றும் ராகவன் என்று இரண்டு இளைஞர்கள், மது போதையில் விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக அங்கு வந்துள்ளனர். 

இதன் போது மருத்துவர் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காத இளைஞர்கள், திடீரென பயிற்சி மருத்துவர் அருண்பாண்டியனை தாக்கியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

மருத்துவரை காப்பாற்ற முயற்சித்த பணியாளர்களையும் மிரட்டி தாக்கிய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த இரண்டு இளைஞர்களும் அதே மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மருத்துவமனையில் ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது அல்லது நடத்த முயற்சிப்பது, மருத்துவர்களை தரக்குறைவாக பேசுவது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. 

இனிவரும் காலங்களில் மருத்துவரை தாக்க முயற்சித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஜாமினில் வெளிவராத வகையில் சிறையில் அடைக்கப்படுவார்கள் " என்று எச்சரிக்கை விடுத்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Collector Govind Rao Warn about Anybody Attack Doctors they will Punish Goonda Act 11 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->