தஞ்சையில், குடிமராமத்து பணியில் கிடைத்த பொக்கிஷங்கள்...!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மங்களநாடு, தஞ்சை மாவட்டம் மன்னார்குடி கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள பகுதியில் அதிகளவு வன்னி மரங்கள் நிறைந்த வில்வன்னி ஆற்றங்கரையானது இருக்கிறது. 

இந்த ஆற்றங்கரையில் முதுமக்கள் தாழிகள் மற்றும் தாழிகளில் உள்ள எலும்புகள், சிறு சிறு கற்காலத்து உபகரணங்கள் என 10 ஏக்கர் பரப்பளவில் பல இடங்களிலும் பரவி உள்ளது. பழங்கால செங்கல், சுமார் 3 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கோடரி என பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஆய்வு செய்தால், சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறுகள் கிடைக்கும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி கட்டயங்காடு கிராமத்தில் இருக்கும் அய்யனார்குளம் பகுதியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்துள்ளது. இந்தசமயத்தில், சில நாட்களாக நடந்து வந்த இந்த குடிமராமத்து பணியில், சில அடி ஆழத்தில் பழமையான சிவப்பு வண்ணத்தில் பெரிய முதுமக்கள் தாழிகள் வெளிப்படத் தொடங்கியுள்ளது. 

இத்தாழிகள் பாதியளவு உடைந்தும், சிலது முழுவதும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் தொல்லியல் துறை ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாரிகள் தாழிடப்பட்ட இடங்களை குறித்து வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவிக்கையில், புதைந்துள்ள தமிழர்களின் வரலாறு தற்போது வெளிப்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தில் கிடைத்துள்ள தாழிகளை ஆய்வு செய்தால் பல தகவல் கிடைக்கலாம் என்று தெரிவித்தனர்.

மேலும், முதுமக்கள் தாழிகள் என்பது மிகவும் பழைமை வாய்ந்தவை.. இன்றளவில் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் போல பொக்கிசமானவை. இவற்றை பாதுகாத்து, ஆராய்ச்சி செய்யும் பட்சத்தில் பல தகவல்கள் தெரியவரும் என்று கூறினர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur ancient items discovers now


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->