17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கற்பமாக்கியவர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது.!! - Seithipunal
Seithipunal


செங்கல் சூளையில் உடன் பணியாட்டிரியவரின் மகளை ஆசை வார்த்தை கூறி கற்பமாக்கிய கயவனை போலீசார் கைது செய்து. அவன் மீது போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே பவணமங்கலத்தில் விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளை செயல்பட்டுவருகிறது. இந்த செங்கற்சூளையில் பவணமங்கலம் காலனி தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வேலை செய்துவருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இவருடன் அதே ஊரை சேர்ந்த காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கௌதமன் (வயது 38) என்பவரும் வேலை செய்து வருகிறார். ரவிச்சந்திரன் மகளான அந்த 17 வயது சிறுமியிடம் கௌதமன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

தவறான நோக்கம் கொண்ட கௌதமன் அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி அவரை பலாத்காரம் செய்துவந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகவே, இதனை அறிந்த சிறுமியின் தாய் மாதவி திருவையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு,  கௌதமன் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

English Summary

THANJAI 17 YEARS GIRLS ABUSED


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal