அதிமுகவிற்கு செல்லாத காரணம் இது தானாம்.!! திமுகவில் இணைந்த தங்க தமிழ்சல்வன் அதிரடி.!!  - Seithipunal
Seithipunal


தங்க தமிழ்செல்வன் மற்றும் டி டிவி தினகரன் இடையே சில நாட்களாக உட்கட்சி பூசல் நிலவிவருகிறது. நேற்று இது ஒரு படி மேலே சென்று இருவரும் மாறி மாறி விமர்சித்து கொண்டனர். அப்போது டிடிவி தினகரன் தங்கதமிழ்செல்வன் கட்சியை விட்டு நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை. அவரை என்னை பார்த்தால் பெட்டிப்பாம்பாக நடுங்குவர் என தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்க தமிழ்செல்வன் " 'ஒன் மேன் ஆர்மி’யாக டிடிவி தினகரன் செயல்படுவதால் கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள், மீதம் உள்ளவர்களும் விரைவில் வெளியேறுவார்கள்.அமமுகவில் நிர்வாகம் சரியில்லை, தினகரனுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை." என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைய இருப்பதாக சில தகவல்கள் வெளியாகின. தற்பொழுது, திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் அதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தேனியில் பிரமாண்ட மேடை அமைத்து அவர் இணையும் விழாவை கோலாகலமாக கொண்டாட இருப்பதாக அறிவித்துள்ளனர். 

"ஒற்றை தலைமை இருக்கும் கட்சிதான் செயல்பட முடியும். அதனால்,தான் திமுக மிகப் பெரிய வெற்றி பெற்றது. துணிச்சலான முடிவை எடுக்கக்கூடியவர் தி மு க ஸ்டாலின். ஆனால், அதிமுகவில் அப்படியில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக நிலையான கட்சியாக இல்லை. இதனால் தான் திமுகவில் இணையும் நிலை உருவானது" என அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thanga tamilselvan says about admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->