சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள்  எவ்வாறு செயல்பட வேண்டும்? ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டதற்கான காரணம் என்ன! நடிகர் அஜித் வெளியிட்ட அறிக்கை!! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

* அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்கவிட்டதும் இல்லை, இதையே தான் என் ரசிகர்களிடமும் எதிர்பார்க்கிறேன் .

* எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் ரசிகர் இயக்கங்களை கலைத்தேன்.

* சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை.  

* ரசிகர்கள் கல்வி, தொழில், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.  சட்டம், ஒழுங்கை மதித்து நடக்க வேண்டும்.கடமையைச் செவ்வனே செய்வதையே ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன். 
 
* என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளேன். அரசியல் திரைப்படங்களில் அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளேன்.
 
* சராசரி பொதுஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பதே அதிகபட்ச அரசியல் தொடர்பு. நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் தல அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

English Summary

THALA AJITH STATEMENT


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal