கோவையில் அல்கொய்தா இயக்கம் போட்ட பக்கா பிளான்.! அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்.!! - Seithipunal
Seithipunal


இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுடன் கோவையை சேர்ந்த 7 பேர் சமூகவலைதளங்களில் தொடர்பில் இருந்ததாக, அவர்களின் வீடுகளில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். என் ஐ ஏ அதிகாரிகள் 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு பாலக்காட்டிற்கு அவர் கத்தாரில் இருந்து வந்துள்ளார்.

அதிகாரிகள் அவரை கைது செய்தனர். சிரியாவிற்கு அவர் தப்பிச் செல்வதற்காக வந்தது தெரியவந்துள்ளது. கோவையிலுள்ள பலருடன் அவர் முகநூலில் நண்பராக பழகி வந்துள்ளார். கேரளா மற்றும் கோவையை சேர்ந்த 30 பேர் தனியாக whatsapp குரூப் துவங்கி அதில் பயங்கரவாதம் சம்பந்தமான கருத்துக்களை பகிர்ந்து உள்ளதும் தெரியவந்துள்ளது.

2014 ல் கேரளாவை சேர்ந்த பயங்கரவாதிகள் அவர்களை சந்தித்து பணம் பயங்கரவாதம் சம்பந்தமான கையில் ஆகியவற்றில் கொடுத்து சென்றதும் தெரிய வந்துள்ளது. அதிகாரிகள் கேரளாவை சேர்ந்த சிலரை மட்டும் கண்காணித்து வருகிறார்கள். விரைவில் அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

terrorist in kovai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->