சென்னை அண்ணாநகரில் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து...! முதற்கட்ட விசாரணை என்ன...?
Terrible fire at GST office Annanagar Chennai What preliminary investigation
சென்னை அண்ணாநகரில் உள்ள மத்திய அரசின் ஜி.எஸ்.டி ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தின் தரைதளத்தில் தொடங்கிய தீ வேகமாக பிற பகுதிகளுக்கும் பரவியது.

மேலும், பற்றிய தகவல் தீயணைப்புத்துறைக்கு உடனுக்குடன் வழங்கப்பட்டது. 6 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீ அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Terrible fire at GST office Annanagar Chennai What preliminary investigation