மாணவனின் வாழ்க்கை கணக்கை முடித்த கணக்கு ஆசிரியர்.! கதறி துடித்த பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் வசித்து வருபவர்கள் சிங்கம்- அமுதா தம்பதி வசித்து வருகின்றனர் இவர்களுக்கு பாலாஜி என்ற மகன் உள்ளார். உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாலாஜி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில், பாலாஜி படைத்தது வரும் அதே பள்ளியின் கணித ஆசிரியர் ரவி, தனியாக டியூசன் சென்டர் ஒன்றை நடத்தி வருவதாக தெரிகிறது. மாணவன் பாலாஜி கடந்த வருடம் 9 ஆம் வகுப்பு படித்த சமயத்தில் கணித ஆசிரியர் ரவியின் டியூசன் சென்டரில் படித்துள்ளார். 
பின் 10ம் வகுப்புக்கு வந்தவுடன் கணித ஆசிரியர் ரவியின் டியூசன் சென்டருக்கு செல்லாமல், வேறொரு டியூசன் சென்டருக்கு பாலாஜி சென்று படித்துள்ளார்.

வேறொரு டியூசன் சென்டருக்கு மாணவன் பாலாஜி மீது கடும் கோபத்தில் இருந்த ஆசிரியர் ரவி, தினமும் பள்ளிக்கு வரும் மாணவனை அடிக்கடி ஏதேனும் காரணத்தைக் கூறி அடித்து துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாணவன் பாலாஜி வீட்டில் தெரிவித்தபோது, அவரை சமாதானப்படுத்தி பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களாகவே பள்ளியில் இந்த பிரச்சனை தொடர்ந்துள்ளது. இந்நிலையில் மாணவன் பாலாஜி வழக்கம் போல சனிக்கிழமை  பள்ளிக்கு சென்றிருக்கிறான். கணித பாடவேளையில் ஆசிரியர் ரவி வகுப்பறைக்கு வந்ததுமே பாலாஜியை கோபத்துடன் திட்டியதாக தெரிகிறது.

ஆசிரியர் ரவி கடுமையாகப் பேசியதால் மனமுடைந்த போன மாணவன் பாலாஜி சனிக்கிழமை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த பெற்றோர்கள் விடு திரும்பியதும் தனது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி துடித்து அழுதுள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் பாலாஜியின் உடலை மீட்டு பிணக்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய உசிலம்பட்டி போலீசார் மாணவன் பாலாஜி எழுதிவைத்த கடிதம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

போலீசார் கண்டுபிடித்த அந்த கடிதத்தில், "தன்னுடைய சாவுக்கு ஆசிரியர் ரவிதான் காரணம் என்றும் அவன் கொடுமை தாங்காமல் தான் இந்த முடிவை எடுத்ததாகவும், அவனுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும், அனைவருக்கும் இறுதி வணக்கம் என மாணவன் பாலாஜி எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு நல்ல முரையில் கணக்கு கல்வியை கற்றுக் கொடுத்து அந்த மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்க வேண்டிய ஆசிரியரே, மாணவனின் வாழ்க்கை கணக்கை முடித்து வைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tenth standard student suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->