கோபமா? மன அழுத்தமா? கணவன் - மனைவி பிரச்சனையா? தற்கொலை எண்ணமா?.. அழையுங்கள் 104..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வருடத்திற்கு சுமார் 33 ஆயிரம் பேர் தற்கொலை முடிவில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், தகவல் தொழில்நுட்ப பணிகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் கள்ளக்காதல் போன்ற பழக்கம் வைத்திருக்கும் நபர்கள் அதிகளவில் தற்கொலை முடிவை தேடிக்கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக சுகாதாரத்துறை கீழ் செயல்பட்டு வரும் 104 என்ற இலவச தொலைபேசியின் சேவை மையத்தின் மூலமாக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக எந்த நோய்க்கு எந்த சிகிச்சை மேற்கொள்ளலாம்? எங்கு உரிய சிகிச்சை கிடைக்கும்? என்பது தொடர்பான விபரங்கள் மற்றும் ஆலோசனைகள் மருத்துவர்களின் அறிவுரைப்படி வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஒரு வருடத்தில் சுமார் 33 ஆயிரம் பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள 80 அரசு மருத்துவமனையில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் படி இவரக்ளின் பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், முறையற்ற பழக்கத்தால் ஏற்படும் தகராறின் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ள விஷம் அருந்திய நபர்கள், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்கள் முதல் இடத்தையும், கடுமையான மன உளைச்சல் மற்றும் பணி நெருக்கடிக்கு உள்ளாகும் தொழில்நுட்ப ஊழியர்கள், கணவன் - மனைவி பிரச்சனையில் தற்கொலை முடிவை தேடியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. 

இவ்வாறாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் முகவரிகள் மற்றும் தொடர்பு எண்கள் குறித்த தகவலை அறிந்த ஆலோசனை குழுவினர், இவர்களின் தற்கொலை எண்ணத்திற்கான கைவிடல் தேவைக்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். மேலும், சுமார் 70 விழுக்காடு நபர்கள் தற்கொலையில் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது போன்ற தற்கொலை எண்ணங்கள் கொண்ட நபர்கள் மற்றும் ஆலோசனையை விரும்புவோர் 104 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும், எந்த பிரச்சனைக்கு பயந்து நடுங்கும் நபர்கள் மட்டுமே தற்கொலையை தேடி செல்கின்றனர் என்றும் மனோதத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tension relief solution to call 104 in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->