மதுரை பறக்கும் பாலத்தின் டெண்டர் விட்டாச்சு! ஆஹா..இத்தனை கோடிகளா!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சட்டசபையில் விதி எண் 110 கீழ் மதுரையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க களவாசல், கோரிப்பாளையத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி அழகர் கோயில் சாலையில் இருந்து துவங்கும் இந்த புதிய மேம்பாலம் தேவர் சிலைக்கு முன்பு இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதி ஏ.வி பாலத்தையும் மற்றொரு பகுதி செல்லூர் செல்லும் அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி சாலையையும் இணைப்பதாக அமைக்கப்பட்டது.

மொத்தம் 3.2 கிலோமீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பறக்கும் பாலத்தின் மதிப்பு சுமார் 175.80 கோடி ரூபாயில் அமைக்க நெடுஞ்சாலை துறை டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20 ஆம் தேதி கடைசி நாள் என்றும் அதன் பின் டெண்டர் இறுதிச் செய்யப்பட்டு மூன்று மாதங்களில் பணி துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெண்டருக்கான விண்ணப்பங்களை www.tn.tender.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கான பணிகளை ஒப்பந்ததாரர்கள் பெற்ற பின் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tender announced for Madurai Flyover Bridge


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->