ஆன்லைனில் நியூஸ் பார்த்தால் பணம்.. களத்தில் இறங்கிய நிறுவனம்..! கதிகலங்கி நிற்கும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு அபெக்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், சுரேஷ் மற்றும்  சாய் ராம் ஆகியோர் பங்குதாரராக கொண்ட இந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஈரோடு காவல் கண்காணிப்பாளரிடம், ஈரோடு சார்ந்த நபர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர். 

அபெக்ஸ் ஏடிசி நியூஸ் சேனல் என்ற இந்த நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் தொலைக்காட்சி செய்திகளை குறிப்பிட்ட நேரத்தில் பார்த்தால் பணம் தருவதாக சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளனர். 85 நாடுகளில் இருந்து 19 மொழிகளில் வெளியாகும் உலக செய்திகளை பார்த்தால் 300% வரை லாபம் கிடைக்கும் என அந்த விளம்பரத்தில் தெரிவித்துள்ளனர். 

இதற்காக 1440 முதல் 4800 ரூபாய் வரை வைப்பு தொகை செலுத்தினால், 20 மாதங்களில் நான்கு மடங்கு லாபம் கிடைக்கும் என ஆன்லைனில் விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. மத்திய அரசின் அனுமதியுடன் இயங்கி வருவதாக தெரிவித்து கொண்ட நிறுவனம், ஆறு வகையான திட்டங்களை அறிவித்து, அதற்கான கட்டணத்தையும் தெரிவித்துள்ளது. 

மேலும் சங்கிலித் தொடர் வியாபார அடிப்படையில், புதிய நபர்களை சேர்த்துவிட்டால் 20% கமிஷன் தருவதாகும் கூறியுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்நிறுவனத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் உறுப்பினராக இணைந்துள்ளனர். சுமார் 100 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் பேர் 5 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் அபெக்ஸ் நிறுவனத்தின் செயலி செயலிழந்து விட்டதால், அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள், விசாரித்தபோதுதான் தங்களைப் போல பலர் இதுபோல ஏமாந்து உள்ளது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். அந்த புகாரில் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறும், குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telangana private company cheated 100 crore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->