சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் வழக்கில் அதிரடி காட்டிய காவல்துறை..! விழிபிதுங்கும் மதுபோதை ஆசிரியர்கள்..!  - Seithipunal
Seithipunal


மிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் அரசு பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வரலாறு பாடத்தின் கீழ் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் லட்சுமணன் (வயது 38) மற்றும் சின்னமுத்து (வயது 34). இருவரும் இங்குள்ள அரூர் பகுதியில் இருந்து வந்து பணியாற்றி செல்கின்றனர். மேலும், அவ்வப்போது இருவரும் மது போதையிலும் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், லட்சுமணன் மற்றும் சின்னமுத்து சேர்ந்து பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். 

மேலும், சிறுமியின் அலைபேசி எண்ணிற்கும் காதல் கவிதை, ஆபாச வார்த்தை மற்றும் ஆபாச படங்களை அனுப்பி வைத்துள்ளான்கள். இதனால் கடுமையான அதிர்ச்சிக்கு மாணவி உள்ளாகி செய்வதறியாது திகைத்துள்ளார். இருவரும் சேர்ந்து சிறுமியை மிரட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக யாரிடமும் கூறினால் வாழ்க்கையையே சீரழித்துவிடுவோம் என்று மிரட்டிஉள்ளான்கள். இதனால் பயந்துபோன சிறுமி இது தொடர்பாக யாரிடமும் கூறாமல் மனதிற்குள்ளேயே துடித்து வந்த நிலையில், நேற்று மது போதையில் வந்த இருவரும் சிறுமியிடம் அத்துமீற முயற்சித்துள்ளனர். 

இதனால் கடுமையான மனத்துயருக்கு உள்ளான சிறுமி வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் விஷயத்தை கூறி கதறியழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சிக்கு உள்ளான தாயார் ஊர் மக்களுக்கு விஷயத்தை கூறவே, மறுநாள் காலையில் சுமார் 10.30 மணியளவில் பள்ளி முன்பாக திரண்டு ஆசிரியர்களிடம் கேள்வி கேட்கையில், அன்றும் மது போதையில் வந்த கொடூரன்கள் திகைத்துள்ளனர்.  மேலும், இது தொடர்பாக தலைமையாசிரியரிடம் முறையிட சென்ற சமயத்தில், தலைமையாசிரியர் முருகேசன் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்து வரும் நிலையில், தகுந்த பதிலும் தெரிவிக்கவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இரண்டு ஆசிரியர்களையும் அடித்து நொறுக்கினர். இதற்குள்ளாக இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். காவல் நிலையத்திற்கு சென்ற பொதுமக்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை வழங்க கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. 

Image result for arrest seithipunal

இது குறித்த விசாரணையை பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் மேற்கொண்டு வந்த நேரத்தில், இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு ஆசிரியர்களின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தேவையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினரும், மாவட்ட கல்வி அலுவலர்களும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teachers sexual harassment to student case punishment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->