கும்பகோணம் பள்ளி ஆசிரியர் சேகர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்.. வி.சி.க பின்புலத்துடன் துணிகரம்..! - Seithipunal
Seithipunal


20 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்ததது காவல்துறை. ஆசிரியருக்கு ஆதரவாக உள்ளூர் வி.சி.க பிரமுகர்கள் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் நகர மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் தான் கணித மேதை ராமனுஜம் படித்தார். அதனால் இந்த பள்ளி அந்த பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கியது. இந்நிலையில், இந்த பள்ளியில் வேலை செய்துவரும் கணித ஆசிரியரான சேகர் என்பவர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக 22 மாணவிகள் புகார் அளித்தனர்.

இதனால், பள்ளி நிர்வாகம் அவர் மீது விசாரணை நடத்தினர். அப்போது குற்றச்சாட்டுகள் உண்மை என்பது உறுதியானதால் பள்ளிநிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து, அவர்களுக்கு அதிர்ச்சி தரும் உண்மை ஒன்று வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2000 முதலே அவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. மாணவிகளிடம் வகுப்பறையிலேயே பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குழந்தைகலின் எதிர்காலம் கருதி பல பெற்றோர் புகார் அளிக்காதது வசதியாகி விடவே அவர் தனது வக்கிரபுத்தியை தொடர்ந்துள்ளான்.

அதையும் மீறி சிலர் புகார் அளித்த போது உள்ளூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களை வைத்து மிரட்டியும், அவர்களை வைத்து பள்ளி முன் ஆர்ப்பாட்டம் செய்தும் மீண்டும் பணியில் சேர்ந்து மீண்டும் தனது வக்கிரபுத்திக்கு மாணவிகளை பலியாக்கியுள்ளான்.

தற்போது துணிந்து வந்து புகார் அளித்த மாணவிகளால் இந்த கொடூரனின் கேவலமான செயல் வெளியுலகத்துக்கு வந்துள்ளது. இதனை அடுத்து அவனை போக்சோவில் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுபோன்ற வக்கிர செயலில் ஈடுபட்ட இவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவனுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேன்டும் என பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher arrested for sexually harassing schoolgirls


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->