பால் விலை உயர்வால் கப் டீ,காபி-யின் விலை உயர்ந்தது!! உயர்த்தப்பட்ட டீ,காபி விலைகளின் விவரம்!! - Seithipunal
Seithipunal


நமது வாழ்வின் அன்றாட தேவைகளில் மிக முக்கியமானது பால். குழந்தைகளுக்கு பால் தான் முக்கிய உணவுவே. அதே போல் பால், காபி ,டீ அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள் இல்லை. ஒரு நாளுக்கு ஒவ்வொரு வீட்டிலும் இரன்டுமுறையாவது  காபி ,டீ போட்டு குடித்து விடுவார்கள். 

உழைக்கும் வர்த்தகத்தினரை பொறுத்தவரையில் உணவு இல்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு  முறையாவது கடைகளில்காபி,டீயை குடித்து விடுவார்கள். அதனால் தான் ஒரு லிட்டர் விலை ரூ.6 விலை அதிகரிப்பு என்பது அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்படைய செய்துள்ளது.

 பால் விலை உயர்வால் மதுரையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் காபி,டீ விலை இன்று முதல் ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்படுகிறது. தற்போது மதுரை நகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஒரு கப் டீ,காபி ரூ.12-க்கு விற்பனை செய்து வந்தனர். ஆனால் இன்று முதல் கப் டீ, காபியின் விலை 12 ரூபாயிலிருந்து, 14 ரூபாய்யாக உயர்த்தப்படுகிறது. 

கிராமப்புற பகுதிகளில் இதுவரை 7 ரூபாய்க்கு, விற்பனை செய்யப்பட்டு வந்த  காபி,டீ தற்போது 7 ரூபாயிலிருந்து, 9 ரூபாய்யாக ஆக உயர்த்தப்படுகிறது. அதேபோல், ஓட்டல்களில் 20வது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பார்சல் டீ, காபியின் விலை ரூ.22 முதல் ரூ.28 வரை அதிகரிக்கப்பட இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tea cofee price increased


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->