டாஸ்மாக்கில் இந்த வார்த்தை கூடவே கூடாதாம்.! கும்பகோணத்தில் பகீர் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தில், உள்ள திருமலைப்புரம் பகுதியைச் சேர்ந்த, சண்முகநாதன் கும்பகோணத்தில் இருக்கும் டாஸ்மாக் ஒன்றில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். நேற்று இரவு கும்பகோணம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் இந்த டாஸ்மாக் கடைக்கு குடிப்பதற்காக வந்துள்ளார்.

அவர் பிராந்தி கேட்டுள்ளார். பிராந்தி காலியாகி விட்டது என சண்முகநாதன் தெரிவிக்கவே, இதனைக் கேட்ட ஆத்திரமடைந்த ராஜேஷ் சண்முகநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் முற்றவே ராஜேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சண்முகநாதனின் கழுத்தில் குத்தி உள்ளார்.

இதனால், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சண்முகநாதன் கீழே விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற பலதரப்பட்ட சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நாம் பார்த்து வருகின்றோம். டாஸ்மாக்கில் பணிபுரியும் பலர் சரக்கில்லை என்ற வார்த்தையை கூறிவிட்டு சேதாரமடைவது அதிகரித்து வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac staff attack by drunken men


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->