தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா.? டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கையும் 29 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச பாதிப்பாக கேரளா, டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டினை விட்டு வெளியே வர வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதனால் பலர் தங்கள் சொந்த ஊருக்கு போகமுடியாமல் உள்ளனர். மேலும், மதுக்கடைகள் மூடப்பட்டது. தற்போது 144 தடை உத்தரவு இருப்பதால் மது விற்பனையை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் நேர கட்டுப்பாட்டுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர்கிர்லோஷ்குமார், மார்ச் 31 ஆம் தேதி டாஸ்மாக் திறக்கப்படும் என்பது வதந்தி என்றும் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac managing director says about tasmac open date


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->