டாஸ்மார்க் குறித்து அதிரடி உத்தரவு.. சிக்கப் போகும் விற்பனையாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில், டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதல் விற்பனை செய்யும் பணியாளர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முதுநிலை மண்டலம் மேலாளரும் தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளை கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்வதற்கு வாரம் தோறும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாவட்ட மேலாளர்கள் நியமனம் செய்து 10 கடை எண்கள் குறித்து உத்தரவிட வேண்டும். 

ஒரு மாவட்ட மேலாளர் மற்ற மாவட்டத்தில் மாதத்திற்கு  40 கடைகளை ஆய்வு செய்திருக்க வேண்டும்.  மேலும் அந்தந்த மாவட்ட மேலாளர்கள் அவர்களது மாவட்டத்தில் உள்ளாகவும் மாதந்தோறும் 30 கடைகளை ஆய்வு செய்து இருக்க வேண்டும். இது தவிர ஒரு மண்டலத்திற்கு உள்ள சிவப்பு பறக்கும் படை அலுவலர்கள் வாரத்திற்கு 60 கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். 

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். உத்தரவுகளையும் பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac management director circular


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->