தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மட்டும் தலா 3 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு வருகின்ற அக்டோபர் மாதம் 6 ஆறாம் தேதி மற்றும் ஒன்பதாம் தேதி தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும், மீதமுள்ள 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 04.10.2021 காலை 10 மணி முதல் 06.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளில் 07.10.2021 காலை 10 மணி முதல் 09.10.2021 நள்ளிரவு 12 மணி வரை வரையிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் மேற்படி பகுதிகளுக்கு அருகில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றியுள்ள பகுதிகளிலும் பீர் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கடைகள் மற்றும் மதுகூடங்களை மூடுவதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, காந்தி ஜெயந்தி (அக்.2), மிலாடி நபி (அக்.19) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac leave for local body election 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->