சரக்குக்காக போராடிய குடிமகன்கள்.. அரசு வாகனத்தில் ஏற்றி சென்று சரக்கு வாங்கி கொடுத்த அதிகாரிகள்..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், ஈரோடு மாவட்டதில் உள்ள சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் என்னும் பகுதியில் அறிவிப்பு எதுவும் இன்றி திடீரென்று ஒரு டாஸ்மாக்  திறக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு டாஸ்மாக் திறக்கப்பட்டதை எதிர்த்து போராட்டதில் ஈடுபட்டார்கள். ஆனால் மறுபுறம் டாஸ்மாக்  திறப்பை கேள்விப்பட்டு குடிமகன்கள் கடைக்கு முன் கூடினார்கள்.

மேலும், அவர்கள் எங்களுக்கு உடனே சரக்கு வேண்டும் என்று கோஷமிட தொடங்கினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இரு தரப்பு மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். டாஸ்மாக் தற்போது திறக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதியளித்த பின், கூட்டம் களைந்து சென்றது.

ஆனால், குடிமகன்கள் அங்கிருந்தது செல்லாமல், வேண்டும் வேண்டும் குடிப்பதற்கு மது வேண்டும் என்று கோஷமிட்டார்கள். இதனால் செய்வதறியாது திகைத்த வேறு வழி இல்லாத அதிகாரிகள்,  தங்கள் வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு வேறு டாஸ்மாக் கடையில் கொண்டு சென்று விட்டனர்.  இதை பார்த்த அந்த பகுதி மக்கள் திகைத்து நின்றார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac issue in erode district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->