தமிழகத்தில் அதிரடியாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்.! அலைமோதும் குடிமகன்கள்.!! - Seithipunal
Seithipunal


வரும் மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது. அது குறிப்பாக தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு, வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஏப்ரல் 16,17,18 மற்றும் மே 23 ஆகிய நான்கு நாட்கள் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகள் மற்றும் காலியாக உள்ள 18 தொகுதி சட்ட சபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

தேர்தல் நடைபெறும் நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைக்குமாறு மாநில அரசுகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 16,17,18 ஆகிய 3 தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 23ஆம் தேதியும் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என தெரிவித்தது. 

இதைத்தொடர்ந்து, இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். 16,17,18 ஆகிய 3 தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

English Summary

tasmac closed for today


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal