#தமிழகம் || 150 ரூபாய்க்கு அடிபோட்டு., பொறியில் சிக்கிய எலியை போல் சிக்கிய டேங்கர் லாரி.!  - Seithipunal
Seithipunal


சுங்க கட்டணத்துக்கு பயந்து, மாற்று வழியில் செல்ல முயன்ற டேங்கர் லாரி ஒன்று, ரயில்வே தடுப்பு கம்பியில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரபள்ளி அருகே, ரயில்வே தரை பாலத்தின் வழியாக செல்வதற்குத் தடை விதிக்கும் வகையில், ரயில்வே துறை சார்பாக தடுப்புக் கம்பி ஒன்று போடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே வரும் கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால், கனரக வாகனங்கள் வந்த வழியே திரும்பி செல்வது வழக்கம்.

இந்தநிலையில், புதுப்பேட்டை வழியாக நாட்றம்பள்ளி சென்ற தனியார் லாரி ஒன்று, சுங்க கட்டணத்துக்கு பயந்து பந்தாரபள்ளி ரயில்வே தடுப்பில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது.

இதனால் செய்வதறியாது ஓட்டுநர், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளின் உதவியையும், அந்தப் பகுதி மக்களின் உதவியையும் நாடினார்.

இதுகுறித்து வெளியான தகவலின்படி அவர் சுங்க கட்டணத்திற்கு பயந்து, இந்த வழியாக வந்ததாக தெரிய வந்துள்ளது. ஒருவழியாக இளைஞர்களின் உதவியோடு லாரியை மீட்டு தப்பித்துச் சென்றார் அந்த ஓட்டுநர். மேலும், லாரி சிக்கிக்கொண்டதால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tanker lorry struggle in railway gate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->