தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கும் போது..பள்ளிகள் திறக்ககூடாதா.? தனியார் பள்ளி சங்கம்.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் தொற்று பரவலின் போது மதுக்கடைகள், திரையரங்குகள் திறக்கலாம். ஆனால், பள்ளிகள் மட்டும் திறக்கக் கூடாதா? என தனியார் பள்ளி சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. அந்த வகையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சில  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதை சுட்டிக்காட்டிய தனியார் பள்ளி சங்கம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள், துணிக்கடைகள், திரையரங்குகள் உள்பட அனைத்தும் திறந்த நிலையில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் பள்ளிகளை மட்டும் ஏன் மூட வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது குறித்த மனுவை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் அளித்துள்ளதாகவும், விரைவில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu why not schools


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->