கார் பம்பர்களை உடனே அகற்றிவிடுங்கள்.. மீறினால் உடனடி தண்டனை.. வேட்டையை துவங்கிய அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


கார்களில் உள்ள பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், கார்களில் உள்ள பம்பர்கள் அகற்றப்படாத பட்சத்தில் ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆணையராக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில், 4 சக்கர வாகனத்தில் பொருத்தப்படும் பம்பர்கள் முக்கிய காரணமாக இருப்பதாக கூறி, கடந்த 2017 ஆம் வருடம் மத்திய போக்குவரத்து அமைச்சகம் பம்பர்களை அகற்ற உத்தரவிட்டது. 

இந்நிலையில், தற்போது விதிகளை மீறி பம்பர் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கையை தமிழக வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் கையில் எடுத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, சம்பவ இடத்திலேயே பம்பர்கள் கழற்றப்படுகிறது. 

கடந்த இரண்டு நாட்களாக பம்பர்கள் உள்ள வாகனங்களை கவனித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து, கையோடு பம்பர்களை அகற்றி கார்களை அனுப்பி வைத்த நிலையில், இனி வரும் நாட்களில் பம்பர்களை அகற்றாத பட்சத்தில் ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் வாகன உரிமையாளர் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் " என்று தமிழக வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Transport Division Warn about Remove Car Bumper


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->