மீண்டும் டாஸ்மாக்கில் டோக்கன் சிஸ்டம்.. டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேர முழு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என தமிழக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகளில் டோக்கன் வழங்கும் நேரத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 

மாலை 4 மணிவரை மட்டுமே டோக்கன் வழங்க வேண்டும். டோக்கன் வாங்க வருபவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிந்து வர வேண்டும். டாஸ்மாக் கடைகளில் சானிடைசர் உபயோகம் செய்ய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் விநியோகம் முறை இனி மறு உத்தரவு வரும் வரை பின்பற்றப்பட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Tasmac Announce Token System 19 April 2021 due to Corona Outbreak


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->