நீட் தேர்வு தற்கொலை!! தமிழகத்தில் அடுத்தடுத்து 2 மாணவிகள் தற்கொலை!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 156 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் நேற்று மதியம் வெளியானது.  அதன்படி தேர்வு எழுதிய மாணவர்களில், தேசிய அளவில் 56.50% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் 701 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் முதல் இடத்தை  பிடித்துள்ளார். டெல்லி, உத்தரபிரதேசம் மாணவர்கள் இரண்டு, மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களின் 48.57%  மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 31.56%  பேர்தான் தேர்ச்சி அடைந்த நிலையில், தற்போது தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முதல் இடத்தை பிடித்த ஸ்ருதி இந்திய அளவில் 57 வது இடத்தை பிடித்துள்ளார் 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்துள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால், திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த வைஷியா ஆகிய இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். இவர்களுடைய தற்கொலை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இரண்டு மாணவிகள் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu students suicide for neet exam result


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal