தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு.. கொரோனாவிலும் கொண்டாடும் பள்ளி மாணவ - மாணவியர்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டில் கரோனா வைரஸிற்கு 562 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸின் அதிதீவிர பரவும் தன்மையின் காரணமாக வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், பள்ளி - கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஏற்கனவே பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கரோனாவின் தீவிரத்தால் பல அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்றிலிருந்து பிற மாநில பள்ளியில் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என்ற அறிவிக்கப்பட்டு வெளியான நிலையில், தற்போது தமிழக முதல்வரும் தேர்ச்சியை அறிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் இரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறாரார்கள்.. இதனைப்போன்று நேற்று தேர்வு எழுத இயலாத 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu school students pass without exam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->