#Breaking: களத்தில் இறங்கிய சசிகலா... தமிழகம் வந்ததும் பேசிய முதல் வார்த்தை.. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


சொத்துகுவிப்பு வழக்கில் பரப்பன அஹ்ரகார சிறையில் 4 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, விடுதலையாகி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதன்பின்னர், மருத்துவர்களின் அறிவுரைப்படி பெங்களூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கி ஓய்வெடுத்தார். 

பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று தமிழகம் திரும்பவுள்ளதாக அறிவிப்பட்ட நிலையில், ஓசூர் எல்லையில் அதிமுக கொடியுடன் காரில் வந்த சசிகலாவிற்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், திருப்பத்தூரில் உள்ள நெற்குத்தி சுங்கச்சாவடி அருகே வைத்து சசிகலா காரில் இருந்தவாறே பேசினார். 

இதன்போது, " புரட்சித்தலைவர் நாமம் வாழ்க, புரட்சித்தலைவி வாழ்க, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க, வளர்க தமிழகம். தீவிர அரசியலில் ஈடுபடுவேன். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். தமிழக மக்களுக்கு அனைத்தும் நன்றாக தெரியும் " என்று தெரிவித்தார். துவக்கத்தில், அன்புக்கு நான் அடிமை, கொள்கைக்கு நான் அடிமை என்ற எம்.ஜி.ஆரின் பாடலை மேற்கோள்காட்டி பேச துவங்கினர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Sasikala Pressmeet at Vellore 8 Feb 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->