குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யார் சென்றாலும், நோ ரேஷன் பொருள்.. 1 ஆம் தேதி முதல் அமலாகும் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலமாக மக்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலாம்க ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் பட்சத்தில், ஸ்மார்ட் கார்டில் இருக்கும் பார்கோர்டை ரேஷன் கடை ஊழியர் ஸ்கேன் செய்து தேவையான பொருட்களை வழங்குவார். 

இந்த கார்டு வைத்து குடும்ப உறுப்பினராக இல்லாத நபர்கள் உட்பட கடைக்கு வந்து பொருட்கள் வாங்கி செல்லும் நிலை இருக்கும் நிலையில், இந்த விஷயத்தில் முறைகேடுகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து குடும்ப அட்டையில் உறுப்பினராக இருக்கும் நபர்களை தவிர, பிற நபர்கள் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கும் பொருட்டு விரல் கை ரேகை பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதனால் குடும்ப உறுப்பினர்களை தவிர பிற நபர்கள் வாங்க இயலாத சூழல் ஏற்படலாம். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மக்களுக்கு முன்னோட்டம் மற்றும் இந்த விஷயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த விஷயத்தில் இயந்திரத்தை அலட்சியமாக கையாண்டு சேதப்படுத்தினால் அதற்கான தொகை மற்றும் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைக்காரரிடம் வசூல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் வரவேற்பை பெற்றுள்ளது.           

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Ration Shop Digital Finger Print Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->