67 நாட்களுக்கு பின்னர் துவங்கிய பொதுப்போக்குவரத்து.. உற்சாகத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இயங்கும் பேருந்துகளில் பயணிகள் பின்புற படிக்கட்டுகளை பேருந்தில் ஏறுவதற்கும், முன்புற படிக்கட்டுகளை இறங்க பயன்படுத்த வேண்டும். பேருந்தில் பயணம் செய்வதற்கு முன்னதாக சானிடைசரால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். 

முன்புற மற்றும் பின்புற படிக்கட்டுகளில் சானிடைசர் இருப்பதை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உறுதி செய்ய வேண்டும். பயணிகள் பேருந்துகளில் டிக்கெட் வாங்குவதை குறைக்க மாதாந்திர பாஸ் வழங்குதல் மற்றும் கியூ ஆர் கோடு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 

பேருந்து தனது ஓவ்வொரு பயணத்தை நிறைவு செய்தவுடன் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். ஏ.சி.பேருந்துகளில் குளிர்பதன வசதியை உபயோகம் செய்ய கூடாது. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 

60 விழுக்காடு பயணிகளுடன் மட்டுமே பேருந்துகள் இயங்க வேண்டும். அதிகளவு கூட்டம் இருந்தால் அடுத்த பேருந்துகளில் பயணம் செய்ய அறிவுரை கூற வேண்டும் என்றும், மேற்படி கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பயணிகள் கடைபிடிப்பதை டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் கவனித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

இதன் அடிப்படையில், சுமார் 67 நாட்களுக்கு பின்னர் ஜூன் 1 ஆம் தேதியான இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக பொதுப்போக்குவரத்து மண்டல வாரியாக இயங்க துவங்கியுள்ளது. பேருந்தில் பயணிகள் உற்சாகத்துடன் தங்களின் சொந்த ஊர்களுக்கும், பணியிடங்களுக்கு திரும்ப துவங்கியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu public Bus transportation started today


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->