50 ஜிபி டேட்டா லிங்கை ஓபன் செய்ய வேண்டாம் - போலீசார் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


இந்தக் காலகட்டத்தில் எங்கு எதை செய்ய வேண்டுமானாலும் ஒன்லைன் மட்டுமே என்ற நிலை உருவாக்கி உள்ளது. அதன் காரணமாக அனைத்து மக்களும் ஒன்லைன் பக்கம் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், சில ஹேக்கர்கள் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதன் காரணமாக தமிழக அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 20 ம் தேதி முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்ற வருகிறது.

இந்த போட்டியை முன்னிட்டு, சமீப நாட்களாக சமூகவலைதளங்களில் "உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 ஜிபி டேட்டா இலவசம்" என்று ஒரு செய்தி பரவி வருகிறது.

அந்த செய்தியில், குறிப்பிட்ட நபர்களுக்கு இதனை ஷேர் செய்தால் உங்களுக்கு 50 ஜிபி டேட்டா இலவசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை உண்மை என்று நம்பி, மக்கள் பரப்பி வருகிறார்கள். 

இந்நிலையில், "உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 ஜிபி டேட்டா இலவசம்" என்று வரும் லிங்கை ஓபன் செய்ய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிகை விடுத்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, 50 ஜிபி டேட்டாவிற்கு ஆசைப்பட்டு, எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள் என்றும் அவ்வாறு லிங்கை ஓபன் செய்தால் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றும் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu police warning for fifty gb data news people forward


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->