தென்காசி: சிவகிரி திருநங்கை தீபிகா காவலர் உடற்தகுதித்தேர்வில் தேர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழக காவல்துறையின் ஆண்-பெண் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை 2 ஆம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் போன்ற பதவிகளுக்கான எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற நபர்களுக்கு ஆரம்பகட்ட உடற்தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள 20 மையங்களில் நடந்து வருகிறது. 

சென்னையில் உள்ள எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை ஆண்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. நேற்று, 2 ஆவது நாளாக பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. 

இந்த தேர்வில் 500 பெண்கள் கலந்துகொண்ட நிலையில், கர்ப்பிணியாக இருந்த 4 பெண்கள் திரும்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் 4 பேருக்கும் குழந்தை பிறந்து உடல் நலமான பின்னர் தனியாக உடற்தகுதி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பெண்களுக்கான பிரிவில் திருநங்கை தீபிகா (வயது 27) கலந்துகொண்டு வெற்றி வாகை சூடினார். இது தொடர்பாக திருநங்கை தீபிகா தெரிவிக்கையில், " காவல்துறையில் பணிக்கு சேர வேண்டும் என்பது எனது கனவு. 3 முறை காவல்துறை தேர்வில் பங்கேற்றும் வெற்றி கிடைக்கவில்லை. இந்த முறை கட்டாயம் வெற்றி அடைவேன் " என்று தெரிவித்தார். 

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி விஸ்வநாதப்பேரி கிராமத்தை சார்ந்த தீபிகா 10 ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார். இவரது தந்தை இருளப்பன் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், தாயார் முத்துலட்சுமி மற்றும் ஒரு சகோதர-சகோதரியுடன் வசித்து வருகிறார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Police Selection Transgender Deepika Select Physical Fitness 4 August 2021 His Native Tenkasi Sivagiri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->