அலட்சியத்தில் இயங்கும் 30 ஆயிரம் மருத்துவமனைகள், கிளீனிக்குகள்.. இறுதிக்கட்ட எச்சரிக்கை விடுத்த மருத்துவச் சேவைகள் இயக்கம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்கிற்கு பதிவு உரிமம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வரவேண்டியது கட்டாயமான ஒன்றாகும். தலைநகர் சென்னையில் சுமார் 2 ஆயிரம் மருத்துவமனைகள் உட்பட, தமிழகம் முழுவதும் 36 ஆயிரத்து 598 மருத்துவமனைகள் மட்டுமே பதிவு உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளது.

இவ்வாறாக பதிவு உரிமை கோரிய மருத்துவமனைகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஏழாயிரம் மருத்துவமனையில் 500 மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு சீராக இருப்பதை அடுத்து, ஓரிரு வாரத்தில் பதிவு உரிமம் வழங்கப்படவுள்ளது. 

போதிய கட்டமைப்புகளை உள்ளடக்காத மருத்துவமனைகளின் தரம் மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், பதிவு உரிமத்திற்கு விண்ணப்பம் கூட அனுப்பாமல் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள் செயல்படுவது தெரியவந்துள்ளது. இந்த மருத்துவமனைகள் 15 நாட்களுக்குள் பதிலளிக்க சம்மன் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவையான நடவடிக்கையை எடுக்காத மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu medical dept announcement about hospital and clinic reg


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->