மாவட்ட எல்லைகள் மூடல்.. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகள் வெறிசோடியுள்ளது. மாநிலம் முழுவதும் பால், மருந்து கடைகளை தவிர பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 

மாவட்டத்திற்கு இடையேயான பயணத்திற்கு தடைவிதிக்கப்ட்டுள்ள நிலையில், மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

சென்னையில் ஊரடங்கை கண்காணிக்க 10 ஆயிரம் காவல் துறையினர் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், 380 வாகன சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 38 பெரிய மேம்பாலங்கள், 75 சிறிய மேம்பாலங்கள் தடுப்பு வேலிகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. 

சென்னை நகரில் உள்ள 408 முக்கிய போக்குவரத்து சந்திப்புகளும் மூடப்பட்டுள்ளது. மக்களின் நடமாட்டத்தை அறிந்துகொள்ள டிரோன் கேமிரா உதவியுடன் காவல் துறையினர் களமிறங்கியுள்ள நிலையில், சாலைகளில் தேவையின்றி நடந்து சென்று சுற்றுபவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்து வருகின்றனர்.

முன்களப்பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்களின் வாகனம் மட்டும் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையின் பிரதான மக்கள் கூட்டம் கூடும் இடங்கள் வெறிசோடி காணப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியே சுற்றிய நபர்களுக்கு அபராதம் விதித்து வரும் காவல் துறையினர், அவர்களின் வாகனத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர். காவல்துறையினர் பொதுமக்களிடம் கண்டிப்புடன் நடந்துகொண்டாலும், சில இடங்களில் எச்சரித்தும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Lockdown Tamilnadu Police Takes Strict Action Offence Lockdown Persons 25 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->