இலட்சம், கோடி என பணம் இருந்தாலும், ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை - அலர்ட் மக்களே..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரண்டாம் கொரோனா அலைபரவலை எதிர்கொள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

நாளொன்றுக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 25 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னை, கோவை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை போன்ற பல்வேறு முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிவேகம் எடுத்துள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மொத்தமாக 1,44,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து இருக்கிறது. 

சிகிச்சைக்காக வரும் கொரோனா நோயாளிகளில் வெண்டிலேட்டர் தேவைப்படும் சூழலில் அதிகளவு நபர்கள் பாதிக்கப்படும் நிலையில், ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் மருத்துவமனைகளில் கண்ணீர் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இலட்சக்கணக்கில் தனியார் மருத்துவமனைகளில் கொடுத்து அனுமதி செய்யும் அளவு வசதி இருந்தாலும் வெண்டிலேட்டர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பலரும் திகைத்து வருகின்றனர். 

இதுமட்டுமல்லாது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நபர்களிடம் முதலிலேயே முன்பணம் வசூல் செய்து வைத்துக்கொள்ளும் தனியார் மருத்துவமனைகளும் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. 

தனித்திரு, விழித்திரு, விலகியிரு.. முகக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Hospital Full due to Corona Patients Tamilnadu Conditions at Risk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->