வாயில் சர்க்கரை போடும் அளவிற்கு, மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மையம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தின் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. 

அடுத்த இரண்டு நாட்களை பொருத்தவரையில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் 13 சென்டிமீட்டர் மழையும், ஈரோடு மாவட்டம் கொடுமுடி, நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தலா 15 சென்டி மீட்டர் மழையும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் புள்ளம்பாடி, கரூர் மாவட்டம் பச்சபட்டி, மதுரை மாவட்டம் தல்லாகுளத்தில் தலா 10 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக ஜூன் 26 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத் தீவு பகுதி, வடக்கு அரபிக்கடல், குஜராத் கடலோர பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், அங்கு சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Have Rain two days announced by Chennai Regional Meteorological center


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->