படப்பிடிப்புகளுக்கு அனுமதி., திரையரங்கில் இந்த விஷயத்திற்கு மட்டும் அனுமதி - தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டு இருக்கிறது. தளர்வுகளுடன் ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. முதல் வகையில் உள்ள கொரோனா அதிகரித்து இருக்கும் 11 மாவட்டங்களில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகள் அப்படியே தொடர்கிறது. திரையரங்கு தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், " திரைப்படம்‌ மற்றும்‌ சின்னத்திரை படப்பிடிப்புகள்‌ 100 நபர்கள்‌ மட்டும்‌ பணிபுரியும்‌ வகையில்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌. 

படப்பிடிப்பில்‌. பங்கேற்றும்‌ பணியாளர்கள்‌ / கலைஞர்கள்‌ அவசியம்‌ கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடில்‌ கலந்து கொள்ள வேண்டும்‌. படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌. திரையரங்குகளில்‌, தொடர்புடைய வட்டாட்சியரின்‌ அனுமதி பெற்று வாரத்தில்‌ ஒரு நாள்‌ மட்டும்‌ பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌ " என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Govt Permit Cinema Shooting and Theater Maintenance work


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->