#Breaking: தைப்பூசத்திற்கு அரசு பொதுவிடுமுறை... தமிழக அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


ஜனவரி மாதம் 28 ஆம் தேதி தைப்பூச தினம் வெகுவாக சிறப்பிக்கப்படும் நிலையில், தைப்பூசத்திற்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தைப்பூசத்தை அரசு விடுமுறையாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 28 ஆம் தேதி முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படும் தைப்பூசத் திருவிழாவானது, தமிழக மக்களால் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ் கடவுள் முருகனின் தைப்பூச திருவிழாவை தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது, முருகன் கோவில் உள்ள உலக நாடுகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். 

அந்த வகையில், தமிழகத்தில் தைப்பூசத் திருவிழா அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்று பல தரப்பில் இருந்து பல வருடங்களாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழக அரசு அதிரடியாக தைப்பூச நாளன்று அரசு விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இனி வரும் வருடங்களிலும் தைப்பூசத் திருவிழாவில் அரசு பொது விடுமுறை வழங்கப்படும் என்றும், இதற்கான பட்டியலில் தைப்பூச திருவிழா சேர்க்கப்படும் என்றும் " தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Govt Holiday Announced thaipoosam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->