12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எப்போது?.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 9 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், எழுத்துத்தேர்வு தேதிகள் கொரோனா பரவல் குறைந்ததும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை பரவல் அதிதீவிர உச்சம் எடுத்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே மாதம் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது நடத்தலாம் என 10 ஆம் தேதி ஆலோசனை நடைபெறுவதாக தகவல் தெரியவந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10 ஆம் தேதி இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபடுகிறார். மேலும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு இறுதி மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Govt High School Education minister Discussion on 10 May 2021 about Result


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->