கேரளாவில் இருந்து கோழி, வாத்து கொண்டு வர தடை - தமிழக அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் இருந்து கோழி, வாத்து கொண்டு வர தமிழக அரசு தடை விதித்துள்ளது. 

சீசன் காலங்களில் ஏற்படும் நோய்களில் ஒன்றாக கேரள மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவலும் சேர்ந்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கேரள மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தொடர்பான பிரச்சனை அதிகரித்துள்ளதால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழி, வாத்து போன்றவை கொண்டு வர தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும், தமிழக - கேரள எல்லையில் உள்ள சோதனைசாவடிகளில் இது தொடர்பான சோதனைகளில் அதிகாரிகள் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக தமிழக கேரள எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் தமிழக சுகாதாரத்துறையால் செயல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், கோழி மற்றும் வாத்து தமிழகத்தில் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Govt Banned Entry of Duck and Chicken Load From Kerala due to Bird Flu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->