"1977 முதல் அமலில் உள்ள திட்டமே" கோவில் நகைகள் தங்கக்கட்டி வழக்கில், தமிழக அரசு பதில்.! - Seithipunal
Seithipunal


கோவில் நகைகள் தங்க கட்டியாக மாற்றப்படும் திட்டம் 1977 ஆம் வருடம் முதல் அமலில் உள்ளது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது.

கோவில்களில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்க ஆபரணங்கள் உருக்கப்பட்டு, வங்கியில் வைப்பு நிதியில் வைக்கப்படும். இதன் வாயிலாக கிடைக்கும் தொகையை வைத்து, கோவில் பணிகள் நிறைவு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 

இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த பதிலில், " கோவிகளில் உள்ள தங்க நகைகள், தங்க கட்டிகளாக மாற்றப்படும் திட்டம் கடந்த 1977 ஆம் வருடம் முதல் அமலில் இருக்கிறது. 

5 இலட்சம் தங்க கட்டிகள் உருக்கப்ட்டு வங்கியில் வைப்பு நிதியில் வைப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ரூ.11 கோடி வருட வட்டியாக தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. கோவில் நகைகளை தணிக்கை செய்வதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இருவர் நியமனம் செய்ய்யப்படுவார்கள் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக். 21 ஆம் நீதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Govt Answer about TN Gold Jewel to Convert Gold Biscuit 12 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->