4 மணிநேரமாக இருந்தாலும் நாங்கதான் கிங்.. வசூல் எவ்வுளவு தெரியுமா?..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலால் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதியம் 12 மணிக்கு மேல் அத்தியாவசிய கடைகளை தவித்து உள்ள அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. மதுபான கடைகள் செயல்படும் நேரமும் காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்து 436 மதுபான கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், தினமும் சராசரியாக ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது. இதனால் அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.120 சராசரியாக வருமானம் கிடைக்கிறது. 

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊரடங்கு நேர கட்டுப்பாடுகள் காரணமாக மதுபான கடைகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மதுபான விற்பனை பாதி அளவு குறைந்துள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் மொத்தமாக ரூ.72 கோடிக்கு மட்டுமே மதுபானம் விற்பனை நடந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான கடைகளை மூடுங்கள், அது உடல்நலத்திற்கு கேடு என பல போராட்டங்கள் நடத்தினாலும், அரசே அதனை ஏற்று வருவாய்க்காக நடத்தும் போது என்ன செய்வது.. என்று தான் இந்த மதுபான கடைகள் மூடப்படுமோ?... 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Govt Announce Partial Lockdown Wine Shop Tasmac Income Reduced


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->