தமிழக அரசின் புதிய சட்டம் ரத்து.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! விவசாயிகள் மகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


நிலம் கையகப்படுத்தல் திட்டம் 2015ம் ஆண்டு தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றம், அந்த சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்த சட்டத்தில் கூறி உள்ள படி ஒன்றரை ஆண்டுகளுக்கு இந்த புதிய சட்டம் செல்லாது என கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த கருணாநிதி உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.  அவர் கூறுகையில், தமிழக அரசு கொண்டு வந்த இந்த புதிய சட்டத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு இல்லாமல் நிலங்களை கையகப்படுத்த கூடாது என்ற விதியில் கூறப்படவில்லை .

நிலத்தை கையகப்படுத்தும் பொது மதிப்பில் 2 மடங்கு வரை இழப்பீடு தர வேண்டும். மேலும்  விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்றும், மத்திய அரசு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசின் சட்டத்தில் இது போன்ற வழி வகைகள் இல்லை. சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யாமல் தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தெரிவிக்க பட்டுள்ளது.

தமிழக அரசு கொண்டு வந்த சட்ட பிரிவு 105(ஏ) அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால், , இந்த நிலம் கையகப்படுத்தல் சட்டங்களின் கீழ், 2013க்கு பின்  தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது. இப்பணிகள் முடிவடைந்திருந்தால் இந்த தீர்ப்பு செல்லாது. நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே இந்த தீர்ப்பு செல்லும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu government plan banned. court order.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->