உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்த சங்கர் என்பவரை, கடந்த 2016 ஆம் ஆண்டு கவுசல்யா தனது பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். எனவே, கவுசல்யாவின் கணவர் சங்கரை பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து வெட்டிக் கொலை செய்தனர். இதை கவுசல்யா வெட்டு காயத்துடன் தப்பினார். 

ஆனால், காயங்களுடன் உயிர்த்தப்பிய கவுசல்யா, கணவரை இழந்ததனால் அவரது கொலைக்கு காரணமான தனது உறவினர் மற்றும் தந்தைக்கு தண்டனையும் வாங்கிக் கொடுக்க முடிவு செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்து, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.  ஜெகதீஷ் உள்ளிட்ட  மற்ற 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

இதனைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட சங்கரின் குடும்பத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் உடுமலை சங்கர் கொலை வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதன்படி கவுசல்யா தந்தை சின்னசாமியை விடுவிக்கும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், ஜெகதீஷ் உள்ளிட்ட 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த மேல்முறையீடு செய்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, கவுசல்யாவை சில வருடங்கள் கழித்து பறையிசை குழுவுடன் சேர்ந்து தனது வாழ்க்கையை மாற்றி கட்டமைத்துக்கொண்டார். உயிராக காதலித்த காதல் கணவரை இழந்து, அடுத்த ஒரு ஆண்டுகளில் பறையிசை குழு சக்தி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவர் திருமணம் செய்து கொண்ட சக்தி ஏற்கனவே பல பெண்களுடன் பழகியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu government appeal supreme court for supreme court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->