வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது -  தமிழக அரசு கடும்  எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


சம வேலை-சம ஊதியம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 7 வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜாக்டோ-ஜியோ என்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பாகும்.

இவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதோடு, அரசு சேவைகளும் பாதிக்கப்படுகிறது.

நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஏற்கனவே ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. அதன் படி நாளை முதல் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அந்த  அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நாளை வேலைநிறுத்தத்தை தொடங்கவுள்ள நிலையில் தலைமைச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

English Summary

Tamilnadu Government Announced


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal