கேங்மேன் பணியின் உடல் தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்த பெண் .!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் லதா, இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கான உடல் தகுதி தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். 

கடந்த சில தமிழகத்தில் மின் வாரியத்தில் கம்பம் நடுதல் மற்றும் புதிய மின் பாதை அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்வதற்கான “கேங்மேன்” பணியில் 5 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்க்கான உடல்தகுதி தேர்வு நடந்து வருகிறது. 

சேலம் மாவட்டம் உடையாப்பட்டியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் கேங்மேன் தேர்வில், கம்பம் ஏறுதல், உயர் அழுத்த மின்கம்பிகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் இணைத்தல், மின்சாதனங்களை தூக்கிக்கொண்டு ஓடுதல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடத்தப்படுகின்றன. 

நவம்பர் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் உடல் தகுதி தேர்வில பெண்கள் அதிகஅளவில் பங்கேற்று வந்தனர். அப்படி பங்கேற்றவர்களில் மேச்சேரியை அடுத்துள்ள அமரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த லதா என்ற பெண் மட்டுமே கேங்மேன் தேர்வாகியுள்ளார்.

பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள லதா தனது வீட்டின் பொருளாதார சூழலை சமாளிக்க வேலைக்குச் செல்ல வேண்டும் முடிவிடுத்துள்ளார். அந்த சமயத்தில் தமிழக அரசின் கேங்மேன் பதவிக்கான அறிவிப்பு வரவே, விண்ணப்பிக்க முடிவெடுத்து. லதாவின் முடிவிற்கு குடும்பத்தினரும் எந்த வித மறுப்பு சொல்லாமல் ஊக்கம் கொடுத்துள்ளனர்.வீட்டில் இருந்தபடியே மரம் ஏறுதல், கம்பம் ஏறுதல் உள்ளிட்ட பயிற்சிகளை லதா மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த பயிற்சிகளை எல்லாம் எடுத்த நம்பிக்கையோடு கேங்மேன் பணிக்கான உடல் தகுதி தேர்வுக்குச் சென்றார், அதில் 8 நிமிடங்களில் ஏறி இறங்க வேண்டிய 30 மீட்டர் உயரம் கொண்ட கம்பத்தில் ஆறு நிமிடங்களில் ஏறி இறங்கி உள்ளார். 31.5 கிலோ எடையிலான மின்சாதனப் பொருட்களை சுமந்து கொண்டு ஒரு நிமிடத்துக்குள் கடக்க வேண்டிய 100 மீட்டர் தூரத்தை லதா 46 வினாடிகளில் கடந்தும் வெற்றி பெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இரண்டு நிமிடங்களில் இணைக்க வேண்டிய உயர் மின்னழுத்த கம்பிகளை 1.46 நிமிடங்களில் இணைத்த லதாவை அங்கிருந்த மின்வாரிய ஊழியர்கள் வியந்து பாராட்டியுள்ளனர்.

இதையடுத்து கேங்மேன் பணிக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவதற்காக தனது வீட்டு வேலைகளுக்கு இடையே  லதா தன்னை தயார்படுத்தி வருகிறார்.

ஏரோட்டுவது முதல் ஏரோப்பிளேன் ஓட்டுவது வரை  சாதனை செய்து வருகின்ற பெண்களுக்கு மத்தியில் பல்வேறு கடுமையான உடல் உழைப்பை கொடுக்க வேண்டிய கேங்மேன் போன்ற சவால்கள் நிறைந்த பணிகளையும் தங்களால் செய்ய முடியும் என லதா நிரூபித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu first women in gang man job


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->