இதுல கூட தமிழகம் தான் முதலிடமா?? தமிழ்நாட்டு மானம் கொடிகட்டி பறக்கிறது!! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் அணைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், தேர்தலில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் பார்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் இதுவரை, நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட, பணம், தங்கம், மதுபானம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை, 1‌‌83 கோடியே 21 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 284 கோடி லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் பணமும், தங்கமும் அதிக அளவில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஆந்திராவில் 137 கோடியே  ரூபாய் பணமும், மகாராஷ்டிராவில் 39 கோடி ‌‌ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu first place in seizing money


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->