மின்னிணைப்பு கட்டணம் அதிரடி உயர்வு.! அறிவிப்பை வெளியிட்ட மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தானே மற்றும் கஜா போன்ற புயல்களின் கோர தாண்டவத்தால்., கடுமையான நிதி நெருக்கடியில் தமிழ்நாடு மின்சார வாரியமானது சிக்கி தவித்துக்கொண்டு இருக்கிறது. மேலும்., கடந்த வருடத்தின் பிப்ரவரி மாதத்தின் போது மின்னிணைப்பு மற்றும் சேவை கட்டங்களை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கும்., மின்சார வாரியமும் மனுவினை வழங்கியிருந்தது. 

இந்த மனுவை ஏற்ற ஆணையம்., இது குறித்து ஆலோசனியா மேற்கொண்டு., பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்ட பின்னர்., முடிவுகள் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவின்படி நடத்தப்பட்ட கூட்டத்திற்கு., பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்திருந்தனர். 

மின்னிணைப்பு பெறுதல் புதிய கட்டணம் 2019,

மின்சார கட்டண உயர்வின் காரணமாக சிறு மற்றும் குறு., நடுத்தர தொழில்கள் அனைத்தும் கடுமையான அளவில் பாதிக்கப்படும் என்பதால்., தமிழக அரசு இதனை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த சமயத்தில்., தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின்னிணைப்பு கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பின் படி., வீட்டிற்கு வழங்கப்பட்டு வரும் தாழ்வழுத்த மின்னிணைப்பை பெறுவதற்கு கட்டணம் ரூ.500 ஆகவும்., மும்முனை மின்சார இணைப்பிற்கு ரூ.1000 ஆகவும்., பொதுகுடிநீர் மற்றும் மின்விளக்கு பயன்பாட்டிற்கு ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள்., வழிபட்டு தளங்கள்., குடிசை தொழில்கள் போன்றவற்றிற்கு ரூ.1000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்., மின்னிணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.300 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் அனைத்தும் நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu electricity line amount increased and activated from today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->